Last Updated : 03 May, 2019 05:14 PM

 

Published : 03 May 2019 05:14 PM
Last Updated : 03 May 2019 05:14 PM

பனிமனிதனாவது காலடித்தடமாவது... : இந்திய ராணுவத்தை மறுக்கும் நேபாள ராணுவம்

இமாலயப் பனிப்பிரதேசத்தில் ‘அருவருக்கத்தக்க பனிமனிதனின் காலடித் தடங்கள்’ கண்டதாக இந்திய ராணுவம் பதிவு செய்ததையடுத்து நேபாள் ராணுவம் அதனைக் கடுமையாக மறுத்துள்ளது.

இந்திய ராணுவம் “யதி காலடித்தடங்கள்” என்று நேபாள்-சீனா எல்லையில் கண்டதாக ட்விட்டரில் கடந்த திங்களன்று  காலடித்தடப் படங்களை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர்  விக்யான் தேவ் பாண்டே,  நேபாள அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர், அவர்கள் கூறிய காலடித்தடங்கள் அங்கு இல்லை. ஆனால் அவர்கள் கண்டது கரடியின் காலடித்தடங்களாகவே இருக்கும் என்று கூறுவதாகத் தெரிவித்தார்.

உள்ளூர்வாசிகளும் அது கரடியின் காலடித்தடமே என்று கூறுகின்றனர் என்கிறது நேபாள ராணுவம்.

சூரிய வெப்பம் மற்றும் காற்றினால் காட்டுக்கரடியின் காலடித்தடங்கள் பெரிதாகியுள்ளன என்ரு வன உயிரிகள் ஆய்வு நிபுணர்களும் கூறியதை உள்ளூர்வாசிகளும் தெரிவித்தனர்.

அன்று இந்திய ராணுவத்தின் மலையேறு குழு புதிர்க்காலடித்தடங்கள் இமாலயப் பனிப்பிரதேசத்தில் கண்டதாகவும் அது பனிமனிதன் யதியாக இருக்கலாம் என்று ட்வீட் செய்திருந்தது.

யதி எனும் பனிமனிதனின் கால் தடங்களை தாங்கள் பார்த்ததாக இந்திய ராணுவம் கோரி இருப்பது சமூக ஊடகம்ங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளானது.

இந்த ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை 60 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இந்த பக்கத்தில், மகுலா ராணுவ முகாம் அருகே பனி மனிதன் யதியின் சந்தேகத்திற்குரிய கால்தடங்களை பார்த்ததாக ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

யதி என்பது தெற்குகாசிய வாய்மொழி கதைகளில் கூறப்படும் மிகப்பெரிய மனித குரங்கு.

உண்மையில் யதி இருக்கிறதா என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x