கடந்த 80 ஆண்டுகளாக ஆசியாவின் கோடைகால பருவமழை குறைந்து வருகிறது : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

கடந்த 80 ஆண்டுகளாக ஆசியாவின் கோடைகால பருவமழை குறைந்து வருகிறது : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Updated on
2 min read

ஆசிய கோடைகால பருவமழைப் பொழிவு கடந்த 80 ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 448 ஆண்டுகளில் மனிதர்களின் செயல்பாட்டால் உருவாகும் மாசுதான் மழையளவு குறைய காரணம் என்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலையின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலையின் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி " ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்" என்ற ஏட்டில் இதுகுறித்து ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளனர். இவர்கள் மரங்களின் தண்டுவடத்தின் உள்ளே இருக்கும் வளைவுகளை வைத்து ஆய்வு நடத்தி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 1940களில் இருந்தே ஆசிய கோடைகால பருமழை அளவு படிப்படியாகக் குறைந்து வருவதால்தான் மண்டலப் பகுதிகளில் வறட்சி, மனிதர்கள் வாழ்வதில் இன்னல்கள் போன்றவை ஏற்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 80 ஆண்டுகளாக பருவமழை குறைந்ததற்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும், சீனாவில் இருந்து அதிகமான அளவு புகை வளிமண்டலத்தில் வெளியாவதற்கும் அதிகமான தொடர்பு இருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலையில் இருந்து மாசுப்புகையை வெளியிடுவது 2-வது உலகப் போருக்குப்பின் தொடங்கி அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இதுகுறித்து அரிசோனா பல்கலை ஆய்வாளர் ஸ்டீவ் லியாவிட் கூறுகையில், " ஏராளமான மரங்களை ஆசியப்பகுதியில் ஆய்வு செய்துவிட்டோம். 450 ஆண்டுகள்  பழமையான மரங்களின் தண்டுகளில் இருக்கும் வளையத்தை சேகரித்து ஆய்வு செய்தோம். அதற்கான தகவல்களையும் வைத்திருக்கிறோம்.

இதன்படி, மரங்களின் தண்டுவடப் பகுதியில் இருக்கும் வளையங்கள் வளர்ச்சி வலுவாக இருக்கும் நாடுகளிலும், அங்குள்ள பகுதிகளிலும் மழையளவு அதிகரித்துள்ளது.

ஆசிய கோடைகால பருவ மழை பெரும்பாலான மழையை குறுகியகாலத்தில் தொடர்ச்சியாக பெய்துவிடுவதால், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பலபத்து ஆண்டுகளாக கோடைகால பருமழை குறைவு, தண்ணீர் கிடைப்பதிலும், சூழியல்முறையிலும், வேளாண்மை ஆகியவற்றிலும் இந்தியா முதல் சைபீரியா வரை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சீனாவின் வடக்கு மத்திய பகுதியில் உள்ள மேற்கு லோஸ் பீடபூமி பகுதியில் இருக்கும் 10 மரங்களில் இருந்து இந்த வளையங்கள் சேகரிக்கப்பட்டு கடந்த 448 ஆண்டுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மழைபொழிவு அதிகமான ஆண்டுகளில் மரங்கள் அடர்த்தியான வளையங்களை உண்டாக்கி வளர்ந்துள்ளன. இந்த வளையங்களின் அடர்த்தி, தடிமன் ஆகியவற்றின் மூலம் மழையளவை அளக்கலாம்.  மரங்களில் உள்ள வளையங்களை கணக்கிடுவதன் மூலம் நமக்கு ஆண்டுகளில் பெய்த மழையின்அளவை அறிய முடியும்.

மரங்களில் உள்ள வளையங்கள் மழையளவு மட்டுமின்றி, வறட்சி, பஞ்சம் ஆகியவற்றையும் பதிவு செய்யும்.கடந்த 1928 மற்றும் 1929ம் ஆண்டுகளில் சீன தவிர்த்து ஏற்பட்ட பஞ்சத்தில் 5 லட்சம் மக்கள் இறந்தனர் என்பதை அறிய முடிகிறது.

இந்த வளையங்களில் மூலம் கிடைத்த தகவல்களை ஆய்வு செய்து, சீனாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் ஒப்பீடு செய்ததில், அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் வறட்சி நிலவியுள்ளது தெரியவந்தது.

கடந்த 450 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 80 ஆண்டுகளில் மழையளவு குறைந்து வருகிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு, மரங்களில் உள்ள வளையங்கள் அளவு மெலிதாக இருப்பதால் இதை அறிகிறோம்.

இவை தவிர சூரியனின் வெப்ப அளவில் வேறுபாடு, எரிமலை வெடிப்பு, மனிதர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றாலும் ஆசியாவில் மழையளவு பாதிக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in