

ஐஎஸ் தீவிரவாதிகளின் குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் 188 குழந்தைகளை துருக்கியிடம் இராக் ஒப்படைத்தது.
ஐஎஸ் பயங்கரவாதிகள் சந்தேகிக்கப்படுபவர்களின் 188 துருக்கியக் குழந்தைகளை இராக் ஒப்படைத்துள்ளதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நீதிபதி அப்துல் சத்துர் பைரக்தார் புதன்கிழமை தெரிவிக்கையில், பாக்தாத் விமான நிலையத்தில் துருக்கி மற்றும் இராக் அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்னிலைகளில், இக்குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
நீதித்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''இக்குழுக்களில் ஒப்படைக்கப்பட்டவர்களில் சில வளர்ந்த இளைஞர்களும் இருந்தனர்.அவர்கள் எல்லையை சட்டவிரோதமாக கடந்து சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்
ஐஸ்எஸ் குழுவுடன் போராடிய பெற்றோர்களுக்கோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டின்கீழ் வசித்துவருபவர்களுக்கோ பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களும் தற்போது ஈராக்கின் நீதித்துறையில் சிக்கியுள்ளனர்'' என்றார்.
இராக்கிய ஜனாதிபதி பஹ்ஹாம் சாலி செவ்வாயன்று துருக்கிக்கு அரசுமுறைப் பயணமாக சென்றார். அவர் அங்கு துருக்கிய ஜனாதிபதி டெய்யீப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.