

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக மோதல் வலுத்துவரும் சூழலில் தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய பகுதியான ஸ்கார்போரங் ஷோலில் அருகே அமெரிக்க போர் கப்பல் சென்றது பதற்றமான சூழ் நிலையை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா ராணுவம் தரப்பில், “அமெரிக்க போர் கப்பல் பிரபெல் ஞாயிற்றுக்கிழமையன்று தனது பணியை மேற்கொண்டது” என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் தென் சீனா கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் இதே மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தென் சீன கடலில் அமெரிக்க கப்பல் வந்திருப்பது சீனா - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மோதலை அதிகப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை இம்மாதிரியான நடவடிக்கைகளில் உலகம் முழுவதிலும், தங்களுடைய நட்பு நாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா சீனா இடையே வர்த்தக ரீதியான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஈரான் மீது பொருளாதார தடை நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்துள்ள நிலையில், அந்தவிதிமுறைகளை மீறி, ஹூவாயின் துணை நிறுவனமான ஸ்கைகாம் ஈரானில் தொழில் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சீன உளவாளியாகச் செயல்பட்டு அமெரிக்க தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து பல முறை எச்சரிக்கை செய்திருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஹூவாய் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நாட்டின் தொழில் நுட்ப துறையில் க்டந்த வெள்ளிக்கிழமை அவசர நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.