Published : 21 May 2019 03:47 PM
Last Updated : 21 May 2019 03:47 PM

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரால் பிரபலம் அடைந்த பாகிஸ்தானின் டைரியன் லானிஸ்டர்

உலகம் முழுவதிலும் ரசிகர்களால் கொண்டாப்பட்ட 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடர் மூலம் பிரபலம் அடைந்திருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ரோசி கான்.

வெப் சீரிஸான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கடந்த 9 ஆண்டுகளில் 8 சீஸன்களாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்ற தொடர். இந்தத் தொடர் சில தினங்களுக்கு முன்னர்தான் முடிவடைந்தது.

எனினும் இத்தொடர் முடிவடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' குறித்து ஏராளமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் மூலம் பாகிஸ்தானில் பிரபலமடைந்திருக்கிறார் 26 வயதான ரோசி கான்.

இவர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உள்ள லானிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்த டைரியன் லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த அமெரிக்க நடிகர் பீட்டர் டிங்க்லேஜின் உருவத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்.இதனால் ஊடக வெளிச்சம் ரோசி கான் மீது விழுந்துள்ளது. மேலும் ரோசி கானைச் சந்தித்து பலரும் செல்ஃபி எடுத்து வருவதாக மகிழ்ச்சியாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து குறித்து ரோசி கான் அல் ஜசிரா ஊடகத்திடம்  கூறியதாவது, ''வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பயணி என்னைப் புகைப்படம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து  நான் டிவி, செல்போன் என அனைத்திலும் பிரபலம் அடைந்துவிட்டேன். மக்கள் என்னைத் தேடி வந்து புகைப்பட்ம் எடுத்துக்கொள்கிறார்கள். 

நான் சிறுவயதாக இருக்கும்போது எனது உயரத்தைக் கண்டு கிண்டல் செய்தார்கள். ஆனால் தற்போது என்னை நேசிக்கிறார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x