

தென் சீனக் கடல் அருகே அமெரிக்க கடற்படையும் பிலிப்பைன்ஸ் கடற்படையும் நேற்று போர் ஒத்திகையை தொடங்கின.
12 நாள்கள் நடைபெறும் இந்த போர் பயிற்சியில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 3500 வீரர்களும் பிலிப்பைன்ஸை சேர்ந்த 1200 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீன எல்லைக்கு அருகே போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த கடல் பகுதி முழுவதும் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதே பகுதியை வியட்நாம், தைவான், புரூனே, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.
இதனால் அமெரிக்க, பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் போர் பயிற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.