Published : 07 May 2019 11:38 AM
Last Updated : 07 May 2019 11:38 AM

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்களை வெளியிட்ட விவகாரம்: சிறைத் தண்டனை பெற்ற பத்திரிகையாளர்கள் விடுதலை

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல் நடவடிக்கைகளில் அந்நாட்டு ராணுவத்தின் பங்கு குறித்து செய்தி வெளியிட்டதால் சிறைத் தண்டனை பெற்ற இரு பத்திரிகையாளர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதல் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தப்பட்டன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்டது.

இதனால், அங்கிருந்து தப்பிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர்.

இந்த நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த தாக்குதலையும், அதில் அந்நாட்டு ராணுவத்தின் பங்கு இருந்ததையும் வெளிக்கொண்டு வந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு பத்திரிகையாளர்களான வோ லோன் (32) மற்றும் யாவ் சோ ஓ (28) ஆகிய இருவருக்கும் மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்ததுள்ளது.

மேலும், பத்திரிகையாளர்களைக் கைது செய்யும்போது முறையான ஆவணங்களைக் காட்டி கைது செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்திரிகையாளர்களுக்கு  வழங்கப்பட்டுள்ள இந்த சிறை தண்டணையை ரத்து செய்யக் கோரி அவர்களின் குடும்த்தினர் மற்றும் மியான்மரின் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வந்த நிலையில்  500 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்த இரு பத்திரிகையாளர்களும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை மியான்மர் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதிபரின் மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ள 6,000 சிறைக் கைதிகளில்  இந்த இரு பத்திரிகையாளர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை குறித்து பத்திரிகையாளர் வோ லோன் கூறும்போது, “  நான் எனது குடும்பத்தையும் என்னுடன் பணிபுரிந்தவர்களையும்  சந்திக்க ஆவலாக இருக்கிறேன். எனது செய்தி அறைக்கு செல்ல ஆவலாக இருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x