

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில்,”ஆப்கான் தலைநகர் லாகூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான பயிற்சி நிலையம் ஆப்கானில் உள்ள மிக முக்கியமான ராணுவ பயிற்சி நிலையங்களும் ஒன்று.
இந்தத் தாக்குதலை ஆப்கான் தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆப்கன் உள்நாட்டுப் போர்
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.