இந்தோனேசியா அதிபராக மீண்டும் ஜோகோ தேர்வு

இந்தோனேசியா அதிபராக மீண்டும் ஜோகோ தேர்வு
Updated on
1 min read

இந்தோனேசியாவில்  நடந்த பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறார் ஜோகோ விடோடோ.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், இந்தோனேசியாவில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 55% ஓட்டுகள் பெற்று மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ’Indonesian Democratic Party of Struggle’ கட்சி வேட்பாளர்.  ஜோகோ விடோடோ.

இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிராபோவோ சுபியண்டோவுக்கு 44% ஓட்டுகளே கிடைத்தது” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் இரண்டாவது முறையாக இந்தோனேசிய அதிபராக தேந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் இந்தத் தோல்வியை பிரபோவோ ஏற்கவில்லை என்று தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதாரவாளகள் இந்தோனேசிய தலை நகர் ஜகர்தாவில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும்போது அதில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்ற இருந்ததாக சந்தேகத்தில் பேரில் 31 ஐஎஸ் தீவிரவாதிகளை  அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in