

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது.
325க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக தொடர்ந்து பாஜக தலைமையிலான அரசு அமைய உள்ளது.இதனைத் தொடர்ந்து புதின், இம்ரான் கான், ஜி ஜிங்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ட்ரம்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்த மிகப் பெரிய தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு அவரது கட்சிக்கும் வாழ்த்துக்கள். நமது முக்கிய பணிகளை உங்களுடன் ஒன்றினைந்து செய்வதற்கு எதிர் நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.