Published : 09 May 2019 01:02 PM
Last Updated : 09 May 2019 01:02 PM

ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: வைரலாகும் வீடியோ

சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயற்சித்தபோது அது கன்னத்தைப் பற்றிக் கொண்டதால், அவருக்குக் காயம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'சீசைட் கேர்ள் லிட்டில் செவன்' என்னும் பிளாக்கை நடத்திவரும் சீனப்பெண், கடல்வாழ் உயிரினங்களுடன் விளையாடுவதையும் அவற்றை உண்பதையும் வீடியோவாகப் பதிவேற்றி வருபவர். இணையத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அண்மையில் விநோதமான ஒன்றைச் செய்ய முடிவு செய்தார்.

உயிருடன் உள்ள ஆக்டோபஸ் ஒன்றை அப்படியே கடித்துச் சாப்பிட முடிவு செய்தார். அதை லைவ்வாகவும் ஒளிபரப்பத் திட்டமிட்டார். அதன்படி, நெளிந்து கொண்டிருந்த ஆக்டோபஸ் ஒன்றைக் கையில் எடுத்தார். அதன் கால்களையும் வாலையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

வீடியோவில் இப்போது சாப்பிடப் போகிறேன் என்று லைவ் கொடுத்துக் கொண்டே சாப்பிட முயன்றார். அதற்குள்ளாக ஆக்டோபஸ் அவரின் முகத்தில் படர்ந்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. அதை எடுக்க முயற்சித்தவரால், ஆக்டோபஸைப் பிடுங்க முடியவில்லை. அதை இழுக்க முயன்றபோது, அவரின் கன்னத்து சதையும் சேர்ந்து வந்தது. இதனால் வலியால் அலறித் துடித்தார் அந்தப் பெண்.

சில விநாடிப் போராட்டத்துக்குப் பிறகு ஆக்டோபஸைத் தன் முகத்தில் இருந்து பிரித்தெடுத்தார். அப்போது அவரின் கன்னத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அழுதுகொண்டே அதைக் காண்பித்தவர், ''அடுத்த வீடியோவில் இந்த ஆக்டோபஸை சாப்பிட்டு விடுவேன்'' என்றார்.

இவரின் செயலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x