பிரேசில் சிறையில் கலவரம்: பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

பிரேசில் சிறையில் கலவரம்: பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

பிரேசிலில் நடந்த சிறைக் கலவரங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''பிரேசிலின் வடக்குப் பகுதியில்  உள்ள மானஸ் நகரில் அமைந்துள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் ஞாயிற்றுக்கிழமை 15 பேர் இறந்த நிலையில் திங்கட்கிழமை அண்டோனியா டிரிடெண்ட் போன்ற சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 40 பேர் உயிரிழந்தனர். சிறைச்சாலையின் வழக்கமான கண்காணிப்புப் பணியின்போது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்துள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்'' என்று செய்தி வெளியானது.

கைதிகளுக்கிடையே இந்தக் கலவரம் எதனால் ஏற்பட்டது என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் சிறையை நிர்வாகிப்பது முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிறையில் நடந்த கலவரத்தில் 56 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே அதிகமான சிறைக்கைதிகளைக் கொண்ட மூன்றாவது நாடாக பிரேசில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in