மோடி பதவியேற்பு விழா: வருகை தரும் உலகத் தலைவர்கள்

மோடி பதவியேற்பு விழா: வருகை தரும் உலகத் தலைவர்கள்
Updated on
1 min read

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு வருகைபுரியும் உலகத் தலைவர்கள்  விவரம் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது.

325க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து புதின், இம்ரான் கான், ஜி ஜிங்பிங், அஷ்ரப் கானி, சிறிசேனா  உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில்  நாளை பிரதமர் மோடியின்  பதவியேற்பு விழாவுக்கு உறுதியாக வருகைபுரியும் உலகத் தலைவர்கள் பெயர் வெளியாகி உள்ளது.

அவற்றின் விவரம்:

* அப்துல் ஹமித் - வங்கதேச அதிபர்

* மைதிரிபால சிறிசேனா - இலங்கை அதிபர்

* ஜின்பிகோவ் - கிரிகிஸ்தான் அதிபர்

* யு வின் மியிண்ட் - மியான்மர் அதிபர்

* கேபி ஷர்மா ஒலி - நேபாளம் பிரதமர்

* லோடே ஷிரிங் - பூடான் பிரதமர்

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்பு விழாவின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் கலந்து கொண்டார்.

ஆனால் இம்முறை இந்தியா சார்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in