Published : 15 May 2019 01:10 PM
Last Updated : 15 May 2019 01:10 PM

ஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை: அமெரிக்கா

இரான் - அமெரிக்கா இடையே மோதல் நடந்து வரும் நிலையில் அந்நாட்டுடன் போர் செய்ய விரும்ப வில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப்  ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து  அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.

இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரான் மோதல் அதிகமாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

இதனால் இரு  நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வந்த நிலையில், இதற்கு பதிலளித்திருக்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ.

இதுகுறித்து ரஷ்யாவில் மைக் பாம்பியோ கூறும்போது, “ ஈரான் சாதாரண நாடு போல நடந்து கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. அந்த நாட்டை தாக்க நாங்கள் விரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் மத தலைவர் அயாதொல்லா அலி காமெனியும் அமெரிக்காவுடன் போரை விரும்பவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x