வடக்கு அயர்லாந்தில் கலவரம்: பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

வடக்கு அயர்லாந்தில் கலவரம்: பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
Updated on
1 min read

வடக்கு அயர்லாந்தில் கலவரம் ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், '' வடக்கு அயர்லாந்து பகுதியில் உள்ள சிரிகனில் ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிகையாளர் லைரா மெகீ  துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

கலவரத்தின் போது ஒரு சில பெட்ரோல் குண்டுகளை போலீஸார் வாகனத்தின் மீது வீசியுள்ளனர். சிலர் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இதனை தீவிரவாத நிகழ்வாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்று செய்தி வெளியானது.

இந்த வன்முறை குறித்து வடக்கு அயர்லாந்து பிரதமர் லியோ கூறும்போது, ''வன்முறை, பயம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றைப் பரப்ப விரும்புபவர்களை நாம் அனுமதிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டீஷ் பிரதமர் தெரசா மே, ''அதிர்ச்சியளிக்கிறது உண்மையில் இது புரிதலற்றது'' என்றார்.

வடக்கு அயர்லாந்தில் இந்த வன்முறைச் சம்பவம் கடந்த ஈஸ்டர் வாரத்திலிருந்தே நடந்து வருகிறது. அங்கிருந்து பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு எதிராக அங்குள்ள குடிமக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈட்டுபட்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லைரா அட்லாண்டிக் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 2016 -ல் ஊடத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பட்டியலில் இவரது பெயரும் இடப்பெற்று இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in