

இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு ஒன்றில் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸ் கூறும்போது, “ இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டு தீ போல பரவி வருகிறது. நமது கவனம் பாதிக்கப்பட்டவர்கள் மீது செல்ல வேண்டும். இந்த சூழ்நிலைக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. சமூக ஒற்றுமை, சமூக ஒற்றுமையை முதலீடு செய்ய வேண்டும்.
இது பன்முக தன்மையுள்ள சமூகத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். தீவிரவாதம் மற்றும் தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும்.
சர்வதேச சமூகம் இந்த வெறுப்பு பேச்சுகளின் ஆணி வேரை கண்டறிய தேவை இருக்கிறது. இதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்” என்றார்.
இந்த மாநாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், தொழிலதிபர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.