அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை: ஈரான்

அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை: ஈரான்
Updated on
1 min read

அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அரசு தொலைகாட்சியில்  ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “ ஈரானின் பாதுகாப்புப் படைகள் எந்த பிராந்திய நாட்டிற்கும் எதிரானது அல்ல. எங்களது படை வீரர்கள் ஊடுவல்காரர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். யூதர்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எங்களது முக்கிய பிரச்சனைகள்” என்று தெரிவித்தார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று குறிப்பிட்டார். இதனை இஸ்ரேல் ஆதரித்தது.

இதற்கு அமெரிக்க ராணுவ முகாம்கள், ராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று ஈரான் பதிலடி அளித்தது. இதற்கு முன்னர் எந்த நாட்டினரும் அடுத்த நாட்டு ராணுவ படைகளை பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டது இல்லை. இதனால் இந்த பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னதாக அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in