Last Updated : 29 Apr, 2019 01:05 PM

 

Published : 29 Apr 2019 01:05 PM
Last Updated : 29 Apr 2019 01:05 PM

இலங்கையில் வெடிகுண்டுகளை கண்டறிய ராணுவத்திற்கு நாய்களை பரிசாக அளித்த பெண்

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் வெடிகுண்டுகளை கண்டறிவதற்காக தான் வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த ஐந்து நாய்களை ராணுவத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் வெடிக்குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்பில் இருக்கும் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைக்கூட நிம்மதியாக வாழமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஷிரு விஜெமானே என்ற பெண், ஒரு சர்வதேச பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் தன்னுடைய வளர்ப்பு நாய்களை ராணுவத்தினர் வெடிகுண்டுகள் கண்டறிதல் போன்ற நெருக்கடி மிக்க நேரத்தில் பயன்படுத்திக்கொள்வதற்காக பரிசாக அளித்துள்ளார்

இவர் அளித்துள்ள 5 ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்கள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் தாய் நாய் வயது இரண்டு ஆண்டுகளும் மற்ற நாய்களின் வயது ஆறு மாதங்களும் ஆகின்றன. இவை அனைத்தையும் இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவை கொழும்புவின் நாரஹெம்பிடா பகுதியில் உள்ள தனது இல்லத்திற்கே வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தார்.

வெடிபொருட்களையும் போதை மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் ராணுவத்தினரின் செயல்பாடுகள் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் இந்நாய் சேர்க்கப்பட்டு இலங்கை ராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் மூலம் இந்நாய்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் இந்நாய்களுக்கு குறிப்பிட்ட முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x