இலங்கையில் சுமார் 130 பேர் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுவதாக அ ந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 என்று கூறப்பட்டு வந்த நிலையில் பலி எண்ணிக்கை 253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து இலங்கை அதிபர் சிறிசேனா கூறும்போது, “ சுமார் 130 - 140 நபர்கள்வரை இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அனைவரையும் கைது செய்வோம்.
இந்தத் தாக்குதல் குறித்த முழு பொறுப்பையும் இலங்கை அரசு ஏற்று கொள்கிறது.ராஜினாமா செய்த காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தராவுக்கு பதில் புதிய நியமனம் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.