தன் மீது ஊழல் குற்றசாட்டை சுமத்திய முன்னாள் அமைச்சர்களை கட்சியிலிருந்து நீக்கிய ஜஸ்டின்

தன் மீது ஊழல் குற்றசாட்டை சுமத்திய முன்னாள் அமைச்சர்களை கட்சியிலிருந்து நீக்கிய ஜஸ்டின்
Updated on
1 min read

ஊழல் வழக்கில் தன் மீது குற்றம் சாட்டிய முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவரை கட்சியிலிருந்து நீக்கினார் கனடா பிரதமர் ஜஸ்டின். இதனால் அவர்  பெரும் விமர்சனத்துக்குள்ளானார்.

இதுகுறித்து ஊடகங்கள், ''கனடா பிரதமர் ஜஸ்டின் ஊழல் வழக்கில் சிக்கிய எஸ்என்சி கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவரது கட்சியைச் சேர்ந்த ஜோடி வில்சன் மற்றும் ஜானே என்ற இரு பெண் அமைச்சர்களும் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொட்ரந்து அவர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் ஜஸ்டின்.

இதுகுறித்து ஜஸ்டின் கூறும்போது, ''அந்தத் தனி நபர்கள் இருவரும் அமைச்சகம் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் 2015 ஆம் ஆண்டு கனடாவின் பிரதமராக பதவி ஏற்கும் போது தனது அமைச்சகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அவரது அமைச்சகத்திலிருந்து இரண்டு பெண்களை நீக்கி இருப்பது அவருடைய அரசியல் செல்வாக்குக்கு ஏற்பட்ட சரிவாகப் பார்க்கப்படுகிறது.

கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜஸ்டினின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஐஸ்டினின் இந்த நடவடிக்கையை துருப்புச்சீட்டாக எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் அவரைப் பலமாக விமர்சித்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in