இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு

Updated on
1 min read

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்த செய்தியை  ஐஎஸ்ஸின்  செய்தி நிறுவனமான அமாக் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும்  ஐஎஸ் வெளியிடவில்லை.

முன்னரே, இந்த குண்டுவெடிப்பு உள்நாட்டு இஸ்லாம் இயக்கத்தால் நடத்தப்பட்டுள்ளது. தோஃபிக் ஜமாத் அமைப்புதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் 7  தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை சர்வதேச தீவிரவாத அமைப்புடன் இணைந்து நடத்தினர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்தது. இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடந்தன. இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கரத் தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.

இந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in