

கிரேட் பிரிட்டனில் இருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்து மக்கள் பொது வாக்கெடுப்பில் வாக்களித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவால் ஸ்காட்லாந்து மக்களின் விருப்பம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: "ஒருவேளை ஸ்காட்லாந்து மக்கள், மாற்றி முடிவு எடுத்திருந்தால்தான் மிகவும் வேதனைப்பட்டிருக்கக் கூடும்.
பொது வாக்கெடுப்பை எதிர்கொண்டது சரியான முடிவு. பொது வாக்கெடுப்பு நடத்தியதன் மூலம், ஸ்காட்லாந்து மக்களின் விருப்பம் நிறைவேறியுள்ளது" என அவர் கூறியுள்ளார்.
தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பில் 55% வாக்குகள் ஸ்காட்லாந்து, கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.