

இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் முன்னாள் ராணுவத் தலைவரான பென்னி கண்ட்ஸின் புளூ மற்றும் வெள்ளை கூட்டணி மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இது குறித்து ஊடகங்கள் தரப்பில், பதிவான ஓட்டுகளில் 90% மேல் எண்ணப்பட்டுவிட்டன. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் நெதன்யாகுவின் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கலாம் என்று தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் நெதன்யாகு முன்னிலையில் உள்ளார் எனவும் சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக 13 ஆண்டுகள் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.