

இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''இலங்கையின் கிழக்குப் பகுதியில் அம்பாரா மாவட்டத்தின் வீடு ஒன்றில் இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து இலங்கை ராணுவம் அங்கு சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் கொல்லப்பட்டனர்” என்று செய்தி வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து நடத்த குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகி உள்ளதாகவும் இலங்கை ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் 5 பேர் குழந்தைகள், 3 பேர் பெண்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து குண்டுகள், வெடிமருந்துகள், ஐஎஸ் கொடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.