Published : 03 Sep 2014 08:42 AM
Last Updated : 03 Sep 2014 08:42 AM

பாகிஸ்தான் நாடாளுமன்றம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், நவாஸுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டம் அரசுக்கு எதிரான கலவரம் எனவும் அரசு விமர்சித்துள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் மற்றும் மத குரு தாஹிர் அல் காத்ரி தலைமையில் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் அமைப்பினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “இந்தப் போராட்டம் ஜனநாயக நடைமுறையிலானது என்ற தவறான எண்ணத்தை நாடாளுமன்றம் நீக்க வேண்டும். இது போராட்டமோ, தர்ணாவோ, அல்ல. இது அரசுக்கு எதிரான கலவரம். போராட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்துக்குள் நுழைந்துள்ளனர். அரசுக்குச் சொந்தமான மற்றொரு கட்டிடத்துக்குள் நுழைந்துள்ள னர். தாஹிர் அல் காத்ரி ஜிந்தாபாத் எனக் கோஷமிட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் ஆயுதங் களுடன் வந்துள்ளனர். பயிற்சி பெற்ற 1,500 தீவிரவாதிகள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். போராட்டக்காரர்கள் ஊடுருவல்காரர்கள். அவர்க ளின் நடவடிக்கையை அரசுக்கு எதிரான கலவரமாக நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும். அவர்களை அடக்குவதற்கு அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவ வேண்டும்” என்றார்.

இதனிடையே, இம்ரான் கான் மற்றும் காத்ரிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், இப்பிரச்சினையைத் தீர்க்க முன்வருமாறு அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளுக்கும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை யில், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை, அச்சுறுத்தல்காரர் களிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள் ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த தலைவர் இத்தியாஸ் ஆஸன் கூறும்போது, “நெருக்கடிக்குப் பயந்து பிரதமர் பதவி விலகக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x