உடற்பருமன், பிற உடல் கோளாறுகளைச் சரி செய்யும் கிரீன் டீ : ஆய்வில் தகவல்

உடற்பருமன், பிற உடல் கோளாறுகளைச் சரி செய்யும் கிரீன் டீ : ஆய்வில் தகவல்
Updated on
1 min read

கிரீன் டீ உடற்பருமன் ரிஸ்குகளைக் குறைப்பதோடு மோசமான ஆரோக்கியத்துக்கான உடற்குறிகளையும் குறைப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எலிகளை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் கிரீன் டீ சாறு கொடுக்கப்படும் எலிகள் இது கொடுக்கப்படாத எலிகளை விட ஆரோக்கியமாக, நோய்க்கூறுகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிபுகள் சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகளையும் குறைக்கும் க்ரீன் டீ குறித்த மேம்பட்ட ஆய்வுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

“இந்த ஆய்வு குடல் பாக்டீரியாவின் வளர்ச்சியை கிரீன் டீ ஊக்குவிப்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது. இந்த நல்ல பாக்டீரியா மூலம் சிலபல நல்ல ஆரோக்கிய விளைவுகள் உடலில் ஏற்பட வாய்ப்புள்ளதைக்காட்டுகிறது, குறிப்பாக உடற்பருமன் நோய்” என்று ஒஹியோ பல்கலைக் கழக பேராசிரியரும் இந்த ஆய்வின் தலைவருமான ரிச்சர்ட் புரூனோ தெரிவித்தார்.

குடல் நாள நுண்ணுயிரியில் ஏற்படும் எதிர்மறை மாற்றங்களே உடற்பருமன் நோய்க்குக் காரணமாக முந்தைய ஆய்வுகள் எடுத்தியம்பின,  இந்நிலையில் கிரீன் டீ நல்ல பாக்ட்ரீயாவை உருவாக்க உதவுகிறது என்கிறது இந்த ஆய்வு.

“சிலர் உடல் எடைக் குறிப்புக்கு கிரீன் டீ  உதவும் என்று கூறுகின்ற்னார், ஆனால் பிற ஆய்வுகள் கிரீன் டீ பெரிய அளவில் உதவவில்லை என்கின்றனர், இதற்குக் காரணம் அந்தந்த வாழ்க்கைமுறை காரணிகளினால் ஏற்படும் உணவுப்பழக்க முறை என்ற சிக்கல் நிறைந்த உடன் காரணிகளாக இருக்கலாம்” என்கிறார் புரூனோ.

கிரீன் டீ  ஆசிய நாடுகளில் பரவலாக புழக்கத்தில் உள்ளது, மேற்கு நாடுகளில் தற்போது அதிகம் பரவி வருகிறது, காரணம் அதன் ஆரோக்கியப் பயன்பாடுகளே.

‘கேடெகின்ஸ், என்ற அழற்சி எதிர்ப்பு பாலிபினால்கள் என்ற ரசாயனம் கிரீன் டீயில் காணப்படுகிறது, இது புற்றுநோய் எதிர்ப்புடனும்  இருதய மற்றும் லிவர் நோய் எதிர்ப்புடனும் தொடர்பு படுத்துகிறது.

மேலும் கிரீன் டீ நச்சு பாக்டீரியாவான எண்டோடாக்சின் இயக்கத்தைத் தடுக்கிறது, இதனால் இது ரத்த ஓட்டத்தில் கலக்காமல் காக்கப்படுவதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்தப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட கிரீன் டீ அளவு நாளொன்றுக்கு 10 கப்கள். “இது பெரிய அளவிலான க்ரீன் டீ நுகர்வுதான், ஆனால் உலகின் சிலபகுதிகளில் நாளொன்றுக்கு 10 கோப்பை க்ரீன் டீ என்பது சகஜமானதே” என்கிறார் ஆய்வுத்தலைவர் புரூனோ.

மேலும் கிரீன் டீ பற்றிய ஆய்வுகள் தொடரும் என்று ஆய்வுத்தலைவர் புரூனோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in