

பூச்சிக்கொல்லிகளை எளிதில் வாங்க முடியாதபடி கட்டுப்பாடுகள் கொண்டுவருவதன் மூலம் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்கொலைகள் குறித்து ஐ.நா.மன்றம் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் முதல் அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்தத் தற்கொலைகளில் பெரும்பாலா னாவை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் படுபவை ஆகும்.
சுமார் 75 சதவீதத் தற்கொலைகள் எல்லாம் வருமானம் குறைவாகவுள்ள நாடுகளில்தான் நிகழ்கின்றன. இந்நாடுகளில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் ஈடுபடு கிறார்கள். விவசாயத்துக்கு பூச்சிக் கொல்லிகள் தேவையாக இருக் கின்றன.
தாங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் போது அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இந்தப் பூச்சிக் கொல்லிகள்தான்.
1990 முதல் 2007 வரை இந்த நாடுகளில் நிகழ்ந்துள்ள தற்கொலைகளின் கணக்கைப் பார்த்தால் அவற்றில் 30 சதவீதம் பூச்சிக்கொல்லிகளைப் பயன் படுத்தி மேற்கொள்ளப் பட்டவை என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்குப் பூச்சிக்கொல்லிகள் எளிதில் கிடைப்பதில்லை. அவை மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தற்கொலைகள் குறைவாக உள்ளன என்பதற்குச் சாட்சியங்கள் இருக்கின்றன.
பொதுவாகவே, தற்கொலை களைத் தடுப்பதில் அரசுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தற்சமயம் 28 நாடுகளே தற்கொலைகளைத் தடுக்கும் திட்டங்களை வைத்திருக் கின்றன.
ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர்கள்தான் அதிகளவு அபாயத்தில் இருக்கிறார்கள். காரணம், அவர்கள் மீண்டும் தற்கொலை முயற்சி மேற்கொள் வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அவர் களைத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.