

பாகிஸ்தான் பத்திரிகையாளர் நதீம் மாலிக்கிற்கு ஹம் நியூசுக்காக தொலைபேசி நேர்காணல் அளித்த பாக்.முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியாவுக்கு எதிரகா பாகிஸ்தான் உளவுத்துறை ஜெய்ஷ் அமைப்பைப் பயன்படுத்தியுள்ளது என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். மேலும் ஜெய்ஷ்-எ-முகமது அமைப்புக்கு எதிரான நடவடிக்கையும் அவர் வரவேற்றுள்ளார்.
பர்வேஸ் முஷாரப் தன்னையே இருமுறை ஜெய்ஷ் அமைப்பினர் கொலை முயற்சி செய்துள்ளனர் என்றார்.
தான் அதிபராக இருக்கும் போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உளவு அமைப்பு ஜெய்ஷ் அமைப்பைப் பயன்படுத்தியது என்கிறார் முஷாரப். டிசம்பர் 2003-ல் தன்னை இருமுறை இதே ஜெய்ஷ் அமைப்பு கொலை செய்ய முயன்றதையும் இந்த நேர்காணலில் தெரிவித்தார்.
சரி, ஏன் அப்போது நீங்கள் அதிகாரத்தில் இருக்கும் போதே (1999-2008) ஜெய்ஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டதற்கு ‘அந்தக் காலக்கட்டம் வித்தியாசமானது’ என்றார். மேலும் தான் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டார் முஷாரப்.