பாகிஸ்தானின் தேசிய தினத்துக்கு வாழ்த்து அனுப்பிய மோடி : இம்ரான் கான் தகவல்

பாகிஸ்தானின் தேசிய தினத்துக்கு வாழ்த்து அனுப்பிய மோடி : இம்ரான் கான் தகவல்
Updated on
1 min read

பாகிஸ்தானின் தேசிய தினத்துக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பினார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ பாகிஸ்தானின் தேசிய தினத்தில் பாகிஸ்தான் மக்களுக்கு  என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். துணை கண்ட மக்கள் ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம் ஏற்பட ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இம்ரான் கான்” எங்கள் மக்களுக்காக மோடி அனுப்பிய செய்தியை நான் வரவேற்கிறேன்.

பாகிஸ்தான் தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் எல்லை பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு குறிப்பாக காஷ்மீர் பிரச்சனையை திர்ப்பதற்கு  இந்தியாவுடன் விரிவான கலந்துரையாடலின் ஆரம்பம் என்று இதனை  நாம் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய தினத்தில் மோடி அனுப்பிட வாழ்த்தை  அ ந்நாட்டு தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு  பாகிஸ்தான் தினத்தை புறக்கணிப்பதாக அறிவித்த  நிலையில் மோடி பாகிஸ்தானுக்கு வாழ்த்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in