Published : 11 Mar 2019 03:23 PM
Last Updated : 11 Mar 2019 03:23 PM

அமெரிக்காவுடனான மோதலுக்கு இடையில் இராக்கில் ஹசன் ரவ்ஹானி

அமெரிக்கவுடனான மோதலுக்கு இடையில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி முதல் முறையாக இராக் வந்திருக்கிறார்.

இதுகுறித்து இராக் அரசு ஊகடங்கள் தரப்பில், ''அரசு முறைப் பயணமாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி இன்று (திங்கட்கிழமை) இராக் தலைநகரம் பாக்தாத் வந்தடைந்தார். விமான நிலையம் வந்தடைந்த ஈரான் அதிபர் ஹசனை, இராக் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது அலி ஹகிம் வரவேற்றார்.

இந்தச் சந்திப்பில் ஈரான் - இராக் இடையே முக்கியமான பேச்சுவார்தையில் இரு நாட்டுத் தலைவர்களும் ஈடுபடுவார்கள். மேலும் இதில் ஷியா முஸ்லிம் தலைவர்களையும் ஹசன் சந்திக்க உள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலையத்தில் இந்தப் பயணம் குறித்து ஹசன் ரவ்ஹானி கூறும்போது, ''நாங்கள் இரான் உடனான உறவை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறோம். இதில் முக்கியமாக போக்குவரத்து சார்ந்த எங்களது உறவில் முன்னேற்ற ஏற்பட ஆவலாக இருக்கிறோம்.

மேலும் இந்த மூன்று நாள்  பயணத்தில் முக்கியத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்'' என்று தெரிவித்தார்.

ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழ்நிலையில், ஹசன் ரவ்ஹானி இந்த இராக் பயணம், அண்டை  நாடுகளுடன் ஈராப் நட்புறவுடன்தான் இருக்கிறது என்ற அழுத்தமான செய்தியை ஈரான் அமெரிக்காவுக்கு அளித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x