சிரியாவின் டோமா பகுதியில் ரசாயனத் தாக்குதல் உண்மைதான்

சிரியாவின் டோமா பகுதியில் ரசாயனத் தாக்குதல் உண்மைதான்
Updated on
1 min read

சிரியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு டோமா பகுதியில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதலை 'watch dog' விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டவுமா பகுதியில்  கடந்த ஆண்டு  நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான் என்று 'watch dog' விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அதில், சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்த டோமா பகுதியில் ஏப்ரல் 7 ஆம் தேதி ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த  நிலையில் ஐஎஸ் வசமுள்ள மற்ற பகுதிகளை மீட்க இறுதிப் போர் நடத்தப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in