

லத்தீன் அமெரிக்க நாடான நிகராகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ராட்சத விண்கல் ஒன்று விழுந்தது. எனினும் இதனால் உயிர்ப் பலிகள் ஏதும் ஏற்படவில்லை.
மனாகுவா நகரத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இதற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சுமார் 20 மீட்டர் விட்டம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று விழுந்தது. இதனால் அந்த இடத்தில் சுமார் 39 அடி பெரிய பள்ளம் உருவானது.
'2014 ஆர்.சி.' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விண்கல் வீழ்ச்சியால் விமான நிலையத்துக்கோ, மனிதர்களுக்கோ எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று நிகராகுவா அரசு தெரிவித்துள்ளது.