அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 23 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 23 பேர் பலி
Updated on
1 min read

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றில் 23 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''அமெரிக்காவின் அலபாமா மாகாணத்திலுள்ள கிழக்குப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றில் 23 பேர் பலியாகினர். இவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடக்கம். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சரிந்துள்ளன'' என்றார்.

இதற்கு முன்னர் இம்மாதிரியான நிலையை எதிர் கொண்டதில்லை என்று அலபாமா பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சூறாவளி ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் வெளிச்சமின்மை காரணமாக தாமதமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் காரணமாக அப்பகுதிகள் சாலை போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூறாவளியில் பலியானவர்களுக்காக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in