

இந்தியா உட்பட நான்கு நாடுகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அதே சமயம் அது புதிய ஏவுகணை ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
'ஹாங்கி 10' என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, போர்க்கப்பல்களைத் தாக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை வான்வெளியில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்தப் புதிய கருவியால், சுமார் 10 நொடிகளில் ஏவுகணைகளை எறிய முடியும். கடல் மட்டத்தில் இருந்து 1.5 முதல் 10 மீட்டர் உயரம் வரை இந்த ஏவுகணைகள் சீறிப்பாயும் என்று கூறப்பட்டுள்ளது.