Last Updated : 13 Mar, 2019 09:22 PM

 

Published : 13 Mar 2019 09:22 PM
Last Updated : 13 Mar 2019 09:22 PM

பிரேசில் பள்ளியில் பயங்கரம்: இருவர் நுழைந்து தாறுமாறாக துப்பாக்கிச்சூடு- 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

பிரேசிலின் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த இரண்டு நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும் 17 பேரெ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சாவோபோலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர்களும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரால் பிரேசில் ஆரம்பப் பள்ளியில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இன்று காலை முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியுடன் வந்த இரண்டு இளம் நபர்கள் 9.30 மணியளவில் பள்ளிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளினர். மேலும் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு பலியாயினர்.

 

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சிறிது முன்னால் இந்தப் பள்ளிக்கு 500மீ தொலைவில் இன்னொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அதுக்கும் இதுக்கும் தொடர்புள்ளதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

இந்தப் பள்ளியில் இன்று சுமார் 1000 மாணவர்கள் வகுப்புக்கு வந்துள்ளனர்.

 

பிரேசில் உலகிலேயே வன்முறை அதிகம் மிகுந்த நாடாகும். 2011-ல் இதே போன்ற பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 12 குழந்தைகள் பலியான பிறகு தற்போது மீண்டும் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு அங்கு தலைகாட்டியுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

 

துப்பாக்கிச் சட்டங்கள் அங்கு கெடுபிடியென்றாலும் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் அங்கு வாங்குவது சுலபமானதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x