சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி நடவடிக்கை

சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி நடவடிக்கை
Updated on
1 min read

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தின.

இந்நிலையில் தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நாடு தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4-வது முறையாக அந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு 15 உறுப்பினர்களில் 14 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சர்வதேச நாடுகளிடம் இந்தியா கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்ஸ் நாடு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது.

இந்நிலையில் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி, ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி அரசு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

ஜெர்மனி அரசின் இந்த நடவடிக் கைக்கு, ஐரோப்பிய யூனியனில் உள்ள 28 நாடுகளும் ஆதரவு கொடுக் கும்பட்சத்தில் இந்த நாடுகளில் மசூத் அசார் பயணம் செய்ய தடை விதிக்கப் படும். மேலும் அவரது சொத்துகளும் முடக்கப்படும் என்று ஜெர்மனி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதுவரை ஐரோப்பிய யூனியனில் இதற் கான தீர்மானத்தை ஜெர்மனி அரசு கொண்டு வரவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் கொள்கை அடிப்படையில் 28 நாடுகளுக்கும் கருத்தொற்றுமை ஏற்படும்பட்சத்தில் மசூத் அசார், இந்த நாடுகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in