அமெரிக்க உதவிகள் நமக்குத் தேவையில்லை: ஈரான் அதிபர் பேச்சு

அமெரிக்க உதவிகள் நமக்குத் தேவையில்லை:  ஈரான் அதிபர் பேச்சு
Updated on
1 min read

டெஹ்ரானில், ஈரான் நாட்டின் தலைவரும் இஸ்லாமிக் குடியரசுக் கட்சியின் நிறுவனருமான அயத்துல்லா ருஹொல்லா கொமேனி நாடுதிரும்பி புரட்சி ஏற்பட்ட 40வது ஆண்டை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்.

டெஹ்ரானில், ஈரான் நாட்டின் தலைவரும் இஸ்மிக் குடியரசுக் கட்சியின் நிறுவனருமான அயத்துல்லா ருஹொல்லா கொமேனி நாடுதிரும்பி புரட்சி ஏற்பட்ட 40வது ஆண்டை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

நாடு கடத்தப்பட்ட ஈரான் தலைவர் கொமேனி 1979-ம் ஆண்டு அவர் விமானத்தில் டெஹ்ரான் வந்திறங்கிய காலை 9.33 மணி நேரத்தில் நாட்டில் புரட்சி மலர்ந்ததாக இக்கொண்டாட்டம் அமைந்தது.

பிரமாண்ட கல்லறை தோட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க, ராணுவத்தினர் இசைநிகழ்ச்சிகளை வழங்கி புரட்சி கீதங்களை முழங்க, வண்ணவண்ண ஆடைகளில் குழந்தைகள் ஈரானிய கொடிகளை ஏந்தி வலம் வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை உரை ஆற்றிய இஸ்லாமிய குடியரசின் மிகப்பெரிய தலைவரால் நியமிக்கப்பட்ட செல்வாக்கு மிக்க நாடாளுமன்றத் தலைவரான அயோத்துல்லா அஹ்மத் ஜனாட்டி அமெரிக்காவுடன் நல்லுறவைத் தேடுபவர்களை கடுமையாக விமர்சித்தார்.

இந்நிகழ்வில் அவர் பேசும்போது, ''அமெரிக்கா நமக்கு உதவி இல்லையென்றால் நம்மால் நாட்டை இயக்கமுடியாது என்று நினைப்பது தவறான கற்பிதங்களின் சாபங்கள் ஆகும். அமெரிக்க உதவிகள் எதுவும் நமக்கு தேவையில்லை. அமெரிக்காவின் சக்தி வீழ்ச்சியில் உள்ளது. அமெரிக்காவைக் கண்டு நாம் பயப்படக் கூடாது'' என்று கையை உயர்த்தி பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் கொமேனி நாடுதிரும்பிய தினத்தை பிப்ரவரி 1 லிருந்து 10 நாள் கொண்டாட்டங்களைத் தொடங்குகிறது. இது ஈரானில் 2,500 ஆண்டுகால முடியாட்சியின் வீழ்ச்சியை குறிக்கும் வகையில் இக்கொண்டாட்டம் பிப்ரவரி 11ல் நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in