

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் அமெரிக்காவில் ட்வின் டவர் மீதான 9/11 தாக்குதல் விபத்தில் சிக்காமல் தப்பித்த சம்பவத்தைப் பற்றிய செய்தி சமீபத்தில் வெளியாகியுள்ளது.
2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் ட்வின் டவர் நடுவே பாய்ந்து விமானத் தாக்குதல் நடந்தது. இதில் 3, 000 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் நடந்த அன்று ட்வின் டவர் கட்டிடத்தில் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கும் ஒரு வேலை இருந்ததாகவும் அதிலிருந்து அவர் எவ்வாறு தப்பித்தார் என்பதைக்குறித்தும் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்சன் எழுதி வெளியிட்டுள்ள தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்,
இந்த சுயசரிதை நூலுக்கு ''நீ தனியாக இல்லை: மைக்கேல்: ஒரு சகோதரனின் கண்கள் வழியாக'' என்ற பெரியடப்பட்டுள்ள இந்நூலில் அவர் தெரிவித்துள்ள விவரம் குறித்து மிர்ரர்.கோ.யுகே இணையதளம் வெளியிட்ட தகவல் வருமாறு:
அதிர்ஷ்டவசமாக, இரட்டை கோபுரத்தின் உச்சியில் இருந்த ஒரு அடுக்கத்தில் அன்று காலை நடக்க இருந்த ஒரு கூட்டத்திற்கு மைக்கேல் ஜாக்சன் செல்லவில்லை.
அன்று இரவு அவர் தன் தாயிடம் பேசியதாவது:
மைக்கேல் ஜாக்சன், ''அம்மா, நான் நல்லாயிருக்கேன். உங்களுக்குதான் நன்றி சொல்லணும். ஏன் தெரியுமா? நேற்றிவு நீண்டநேரம் என்னை தூங்கவிடாமல் பேசிக்கொண்டிருந்ததால் நான் இன்று எழுந்திருக்க நிறைய நேரம் ஆகிவிட்டது. அதனால் அந்த அப்பாயிண்மென்ட்டை தவறவிட்டேன்.'' என்றார் ஆச்சரியமாக
இவ்வாறு சுயசரிதையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவிலான அந்த தாக்குதலிலிருந்து தப்பித்து உயிர்பிழைத்தபோதும், அந்த புகழ்பெற்ற பாடகரை 8 ஆண்டுகள் கடந்தபிறகு மாரடைப்புநோய் அவரை பலிவாங்கியது.