வெனிசுலா விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட்டால் ரத்த கறைகளுடன் தான் வெளிவருவார்: நிகோலஸ் மதுரோ

வெனிசுலா விவகாரங்களில் ட்ரம்ப் தலையிட்டால் ரத்த கறைகளுடன் தான் வெளிவருவார்:  நிகோலஸ் மதுரோ
Updated on
1 min read

வெனிசுலாவின் உள்விவகாரங்களில் ட்ரம்ப் தலையீட்டால் ரத்த கறைகளுடன்தான் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவருவார் என்று அந்நாட்டு அதிபர்  நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி  நேர்காணல் ஒன்றில் மதுரோ பேசும்போது, ” எங்களது உள்விவகராங்களில் யாரும் தலையிட வேண்டாம்,. நிறுத்துங்கள் ட்ரம்ப். எங்கள் நாட்டு விஷயங்களில் தலையிட நினைத்தால் வெள்ளை மாளிகையிலிருந்து ரத்தக் கறைகளுடன்  வெளிவருவீர்கள். வெனிசுலாவை வியட் நாமாக மாற்ற எண்ணாதீர்கள்” என்றார்

அதுமட்டுமல்லாது வெனிசுலாவில்  தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் ஆலோசனையை மதுரோ நிராகரித்தார்.

கடந்த மாதம் எதிர்கட்சி தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்பைடையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சோஷலிச அரசாட்சி எங்கு நடந்தாலும் அது அமெரிக்காவுக்கு வேப்பங்காயக கசக்கும், அதனை அழிக்க ஏகாதிபத்திய அராஜகங்களை அங்கு கட்டவிழ்த்து விடுவது வழக்கம்.

வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. வெனிசுலாவில் மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மீதான அடக்குமுறை நடப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. உண்மையில் இந்தத் திண்டாட்டத்துக்குக் காரணம் அமெரிக்காதான், வெனிசூலா சோஷலிச அரசு என்பதால் அதன் மீது ஏகப்பட்ட பொருளாதாரத் தடைளை விதித்ததால்தான் அங்கு மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர், ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் இதனை மறைத்து மதுரோ ஆட்சியின் குணாம்சங்களாக கட்டமைத்து வருகின்றன.

மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராடி வருகின்றனர்.

மேலும், அண்டை நாடுகளான கொலம்பியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் கம்யூனிஸ்ட் நாடான வெனிசுலாவுக்கு நட்புறவு இல்லை. இதனால், ஒதுக்கப்பட்ட நாடாகவே இருந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in