Published : 12 Feb 2019 01:00 PM
Last Updated : 12 Feb 2019 01:00 PM

ரஜினியின் 2.0 காட்சியை மீம்ஸாகப் பதிவிட்ட ஆஸ்திரேலிய போலீஸ்

போக்குவரத்தின்போது பின்பற்றப்படும் விதிகள் குறித்த பதிவில் ஆஸ்திரேலிய போலீஸார் ரஜியின் '2.0' காட்சியைப் பயன்படுத்தியுள்ளனர்.

விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை மக்களுக்கிடையே ஏற்படுத்துவதற்கு  சமூக வலைதளங்களில் மீம்ஸ்தான் இன்றைய பிரதான ஆயுதமாக உள்ளன.அந்த வகையில் போலீஸார் தொடங்கி பலரும் மக்களுடைய நல்ல கருத்துகளைக் கொண்டு செல்லவும், விதிமுறை மீறல்களால் ஏற்படும் பாதிப்புகளை தெரியப்படுத்தவும் திரைப்பட மீம்ஸைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இது சமீபகாலமாக ட்விட்டரில் அதிகரித்துள்ளது. இதனை மும்பை போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி செயல்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் டெர்மி நகர போலீஸார் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தீமை குறித்த மீம்ஸை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அதுவும் அதற்கு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த '2.0' படத்தின் போஸ்டரைப் பயன்படுத்தி இருந்தனர்.

இதனை ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த மீம்ஸில், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரைச் சோதித்தபோது அவரது மூச்சுக்கற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது . இந்த அளவு என்பது மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர்  அல்லது கோமா நிலையில் இருக்கும்  நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்குச் சமம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x