Published : 05 Feb 2019 08:45 PM
Last Updated : 05 Feb 2019 08:45 PM

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்: இரு உடல்கள் மீட்பு

ஆஸ்திரேலியாவின்  குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரண்டு பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மீட்புப் பனி அதிகாரிகள் தரப்பில், குயின்லாந்து மாகாணத்தில் வெள்ளம் சிறிது சிறிதாக வடிய தொடங்கி உள்ளது. இந்த  நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கிட்டதட்ட 1100 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன” என்றனர்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான மழை கொட்டித்தீர்த்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், மின்சாரம், துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

அடுத்து சில நாட்களுக்கு கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருப்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அரசு எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கோடைகாலத்தில் கனமழை பெய்வது வழக்கம் ஆனால், இப்போது பெய்துள்ள மழை இயல்புக்கும் அதிகமான மழையாகும்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். 20 ஆயிரம் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x