

ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் உள்ள மான்ரேசா சான்ட் வென்சென்க் பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றின் மீது மோதிக் கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மூன்று பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 90க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் கருவியில் ஏற்பட்ட கோளாறுக் காரணமாக இந்தத் விபத்து ஏற்பட்டுள்ளதாக இதன் காரணமாக ரயில்கள் தடம் மாறி வந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ இந்த விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். மீட்புப் பணிகள் உடனடியாக நடைபெற வேண்டும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் ஸ்பெயினில், இதே பாதையில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.