

பாகிஸ்தானின் கைபர் பக்துவான் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் 1000 கிலோ வெடிபொருளை வீசி தீவிவரவாத முகாம்களை அழித்துள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியோ கிண்டலாக ட்வீட் பதிவு செய்துள்ளார்.
இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிஃப் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. ஆனால், பாகிஸ்தான் விமானப் படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், இந்திய விமானங்கள் திரும்பிச் சென்றன.
முஸாஃபராபாத் செக்டாரில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்தபோது உரிய நேரத்தில் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க அவசர அவசரமாக வெற்று இடத்தில் வெடிபொருளை போட்டுவிட்டு இந்திய விமானங்கள் தப்பியோடின. பாலாகோட் பகுதியில் வெடிபொருள் விழுந்துள்ளது. இதில் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. பொருட்சேதமும் இல்லை. மேலும், தொழில்நுட்பத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" என அடுத்தடுத்த ட்வீட்களில் பதிவிட்டுள்ளார்.