Published : 14 Feb 2019 02:59 PM
Last Updated : 14 Feb 2019 02:59 PM

கடனை திருப்பிச் செலுத்த முன்வந்தபோது வங்கிகள் ஏற்காதது ஏன்? - பிரதமர் மோடிக்கு விஜய் மல்லையா கேள்வி

கடனை திருப்பிச் செலுத்துகிறேன் எனக் கூறியபோது அதனை ஏற்றுக் கொள்ளும்படி வங்கிகளுக்கு பிரதமர் ஏன் அறிவுறுத்தவில்லை என லண்டன்  தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி அளவில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக் குத் தப்பிய விஜய் மல்லையா மீது எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் புகார் அளித்தன. அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து அவரது சொத்துகளை முடக்கியது. தப்பி யோடிய பொருளாதார குற்றவாளி மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்காக இங்கி லாந்து அரசுடன் இந்திய அரசு பல் வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அதன்பேரில் லண்ட னில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது உத்தரவும் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16வது மக்களவையின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி தனது உரையில் விஜய் மல்லையாவின் பெயரை குறிப்பிடாமல் இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், விஜய் மல்லையா தனது ட்வீ்ட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்திய மீடியாக்களில், நாடாளுமன்றத்தில் பிரதமர் நிறைவுரையாற்றியது எனது கவனத்திற்கும் வந்தது. அவர் ஒரு சிறந்த பேச்சாளர் தான் சந்தேகம் இல்லை. அவர் தனது உரையில் 9000 கோடி ரூபாயை கொண்டு ஓடிவிட்டதாக பெயரை குறிப்பிடாமல் பேசினார். ஊடகங்கள் எனது பெயரைத்தான் அதிலும் இழுத்துவிட்டன.

நான் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்படுகிறது. அப்படியானால், நீதிமன்றங்கள் முன்பாக ரூ.14000 கோடி சொத்துக்கள் இருப்பதாக எப்படி வெளிப்படையாக தெரிவிக்க முடியும்? உடகங்கள் தவறான தகவலை அளிக்கின்றன.

கடனை திருப்பிச் செலுத்துகிறேன் எனக் கூறியபோது அதனை ஏற்றுக் கொள்ளும்படி வங்கிகளுக்கு பிரதமர் ஏன் அறிவுறுத்தவில்லை. நான் டேபிளில் தூக்கி வைத்த பிறகும் அந்த பணத்தை திரும்ப பெற வங்கிகளுக்கு அறிவுறுத்தவில்லை. அப்படி ஏற்றுக்கொண்டால், கிங்பிஷருக்கு கொடுத்த முழு கடனையும் மீட்டுவிட்ட பெருமையை பிரதமர் பெற்றுக்கொள்ளலாமே.

இவ்வாறு விஜய் மல்லையா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x