Published : 20 Sep 2014 03:51 PM
Last Updated : 20 Sep 2014 03:51 PM
உக்ரைனுக்கு தேவையான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடம் மேற்கொண்ட சந்திப்பின்போது, "தேவையான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா வழங்கும்" என்று ஒபாமா உறுதியளித்தார்.
அத்துடன், உக்ரைனின் வளர்ச்சிக்காக அதிபர் பெட்ரோ போரோஷென்கோ எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.