மெக்சிகோ எல்லையில்சுவர்: அமெரிக்காவில் அவசரநிலையை அறிவித்தார் அதிபர் ட்ரம்ப்

மெக்சிகோ எல்லையில்சுவர்: அமெரிக்காவில் அவசரநிலையை அறிவித்தார் அதிபர் ட்ரம்ப்
Updated on
2 min read

அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை நேற்று அதிபர் டொனார்ட் ட்ரம்ப் பிறப்பித்தார்.

நாடாளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு அதிபர் ட்ரம்ப் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்தனர். இதனால், பொறுமை இழந்த அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்தார்.

ஆளும் குடியரசு கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சமீபத்தில் எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பேச்சு நடந்தது. எல்லைச் சுவருக்காக அதிபர் ட்ரம்ப் 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,300 கோடி) கோரினார். ஆனால், அதில், 137.5 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்ய மட்டுமே ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் ஒப்புக் கொண்டனர்.

ட்ரம்ப் வலியுறுத்தி வந்தபடி கான்க்ரீட் சுவர்களை எழுப்ப ஜனநாயக கட்சியினர் ஒப்புதல் வழங்கவில்லை இதனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் அவசர நிலையை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அதிபர் ட்ரம்ப் தனக்கு இருக்கும் அரசமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்று மனித உரிமை ஆர்வலர்களும், ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களும் கண்டித்துள்ளனர்.

ரோஸ்கார்டன் இல்லத்தில் இருந்து அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், " அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள், கிரிமினல் குற்றவாளிகள் ஆகியோரைத் தடுக்க இந்தச் சுவர் மிகவும் அவசியமானதாகும். இந்தத் திட்டம் மிகப்பெரியது, சிறப்பு வாய்ந்தது. நிதிஒதுக்கீடு மூலம் இந்தத் திட்டத்தை நான் விரைந்து முடிப்பேன். இந்தத் திட்டத்தை நீண்டநாட்கள் கொண்டு செல்லமாட்டேன். எனக்கு முன் ஆட்சியில் இருந்த அதிபர்கள் பலர் இதற்கு முன் அவரசரநிலையை பிரகடனம் செய்திருக்கிறார்கள். ஆனால், அவசரநிலையை அறிவித்துள்ளது, மிகவும் முக்கியத்துவம் குறைவானதற்குத்தான் " எனத் தெரிவித்தார்.

கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இதுவரை 60 முறை தேசிய அளவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தடுப்புச் சுவர் திட்டத்துக்குத் தேவையான நிதியை டிரம்ப் ஒதுக்க

தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாக விதிக்கப்பட்ட பணம், ராணுவ கட்டுமானப் பணிகளுக்கான நிதி, போதைப் பொருள் தடுப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிபர் ட்ரம்ப் சுவர் எழுப்ப ஒதுக்குவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஜக் ஸ்குமர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில், " அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் அவசரநிலையை அறிவித்தது சட்டவிரோதம். அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வன்முறை" எனத் தெரிவித்தனர். மேலும், அதிபர் ட்ரம்பின் அறிவிப்புக்கு குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் சிலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in