மியான்மரில் சூச்சியின் ஆலோசகரை கொன்ற வழக்கு: 2 பேருக்கு தூக்கு தண்டனை

மியான்மரில் சூச்சியின் ஆலோசகரை கொன்ற வழக்கு: 2 பேருக்கு தூக்கு தண்டனை
Updated on
1 min read

மியான்மரில்  அந்நாட்டு தலைவர்  ஆங் சான் சூச்சிக்கு ஆலோசகராக இருந்த வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு அந்நாட்டு  நீதிமன்றம்  தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”மியான்மர் தலைவர் ஆங் சன சூச்சிக்கு ஆலோசகராக இருந்த மியான்மரின் பிரபல வழக்கறிஞர் கோ னி மரணத்தில் தொடர்புடைய இருவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மரில்  பிரபல வழக்கறிஞராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருந்தவர் கோ நி, இவர் மியான்மரின் சிறுப்பானமையினராக உள்ள முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர். இவரருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கல் வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மியன்மரில் உள்ள யான்கோன் விமான நிலையத்தில்  துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மியான்மரையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் தொடர்படைய இருவருக்கு  அந்நாட்டு போலீஸார் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்த நிலையில் தற்போது இருவருக்கு தூக்கு தண்டனை அளித்துள்ளது. மேலும் ஒரு நபருகு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in