Published : 05 Feb 2019 02:30 PM
Last Updated : 05 Feb 2019 02:30 PM

‘‘தீயின் புயலைப் போன்ற பேஸ்புக் நேர்மறையான சக்தி’’ - ஜூக்கர் பெர்க் பெருமிதம்

சிக்கலான சமூக வலைப்பின்னலில் பேஸ்புக் சமுதாயத்திற்கான பரந்துபட்ட ஒரு நேர்மறையான சக்தியாக திகழ்வதாக 15வது ஆண்டுநிறைவுவிழாவில்மார்க் ஜூக்கர் பெர்க் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தொடங்கி சரியாக பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அவரும் அவரது தோழர்களும் இணைந்து உருவாக்கியபோது அது ஒரு வண்ணக் கனவாகத்தான் தொடங்கப்பட்டது. இன்றும் நாம் அனுபவிக்கும் பேஸ்புக் உலகை இணைக்கும் மார்க் ஜூக்கர் பெர்க் உருவாக்கிய குழுவின் கடுமையான உழைப்பில் அது எல்லைக்களைக் கடந்த உறவுகளின் கைகுலுக்கல்களாக மாறிப்போனது.

பேஸ்புக் தொடங்கப்பட்டு 15 ஆண்டு நிறைவுவிழாவையொட்டி நேற்று (திங்கள்கிழமை) மார்க் ஜூக்கர் பெர்க் தனது பதிவில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:

பேஸ்புக், துஷ்பிரயோகம், தவறான தகவல், அவதூறு மற்றும் பிற சமூக நோய்க்கூறுகள் தொடர்பான விமர்சனங்களை பேஸ்புக்கும் எதிர்கொண்டுவருகிறது.

எனினும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தின் தாக்கங்களினால் அதிகப்படியாக எதிர்மறைகளை தூக்கிப்பிடிக்கும் இந்தப் போக்கு மிகமிகத் தவறானது.

அதேநேரம் தீயின் புயலைப் போன்றதென்றாலும் பேஸ்புக் நேர்மறையான சக்தியாகவே நான் பார்க்கிறேன். நல்ல மாற்றங்களுக்காக இதைப் பயன்படுத்த வேண்டும்.

பாரம்பரிய படிநிலைகளுக்கு பதிலாக அரசாங்கத்திலிருந்து வணிகத்திற்கும் வணிகத்திலிருந்து ஊடகங்களுக்கும் இணையத் தொடர்புகள் வழியே இந்த வலைப்பின்னல் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இது ஒரு ஆழமான மாற்றம் என்றே நினைக்கிறேன்.

எந்த விரைவான சமூக மாற்றமும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும்போது, மக்களே மேலதிக அதிகாரங்களைப் பெறுபவர்களாக மாறுவதை நான் பார்க்கிறேன். இன்னும் திறந்தமனதுடன் மற்றும் பொறுப்புணர்வுடன் நீடித்திருக்கவேண்டிய சமூக மாறுதலாகவும் அது இருக்கவேண்டும்.

மக்கள் எவ்வாறு தங்கள் சமூகத்தோடும் நிறுவனங்களோடும் உரையாட வேண்டும் என்பதை மற்ற சமூக வலைதளங்களும் அடிப்படையான மாற்றங்களை பெற்றுள்ளது.

செய்திகளையும் நாம் வெளியிடத் தொடங்கிய பிறகு உருவான மாற்றங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், கொலம்பியாவில் வன்முறையை எதிர்த்து பல கோடி மக்கள் திரண்டு நின்றதை நாம் பார்த்தோம். நல்ல நோக்கத்தோடு நிதி திரட்டுவதற்காக வைரலாக பரவி சமுதாயங்கள் ஒன்றாய் இணைந்து வந்ததையும் நாம் பார்த்தோம்.

கடந்த 15 ஆண்டுகாலமாக இந்த புதிய வலைப்பின்னல்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் நிச்சயம் அடுத்த 15 ஆண்டுகளில் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்தி அவர்கள் வெற்றிபெற முடியும். அடுத்து வரும் பத்தாண்டுகளுக்கு ஆழ்ந்த நேர்மறையான ஆற்றலைக் கொண்டிருக்கும் சமூக மாற்றங்களை அது வழிக்குக் கொண்டுவரும்.

புதிய தகவல்களை பகிர்ந்துகொள்ளவும் மேலும் பல தகவல்களைப் பெற புதிய மக்களோடு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் மக்கள் உலக அளவில் 2.3 பில்லியனுக்கும் மேலாக உள்ளனர். இவ்வகையில் பேஸ்புக் முன்னெப்போதும் இல்லாத வெற்றியை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக், மோசடிகளின் அலைகளை எதிர்கொண்ட போதிலும் 2018 ஆம் ஆண்டில் 22 பில்லியன் அமெரிக்கன் டாலர் லாபம் ஈட்டியது, வருவாய் என்றால் 55 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மார்க் ஜூக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x