Published : 22 Feb 2019 10:18 AM
Last Updated : 22 Feb 2019 10:18 AM

தீவிரவாதமும் பருவநிலை மாறுபாடும் மனித குலத்துக்கு பெரும் சவால்கள்: தென்கொரியாவில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து

தீவிரவாதமும் பருவநிலை மாறுபாடும் மனித குலத்துக்கு எதிரான மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடிக்கு ‘சியோல் அமைதி பரிசு' அறிவிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்க நடவடிக்கை, இந்திய, உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது, உலகஅமைதியை ஏற்படுத்த பல்வேறுநாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவது ஆகியவற்றுக்காக பிரதமர் மோடி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சியோல் அமைதி பரிசை பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தென்கொரிய தலைநகர் சியோல் சென்றார். அங்கு யோன்சி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை மோடி திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:தீவிரவாதமும் பருவநிலை மாறுபாடும் மனித குலத்துக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. காந்தியின் வாழ்க்கையை ஆராய்ந்தால் இரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அவரது போதனைகளை படித்தால் புதிய பாதையைக் கண்டுபிடிக்கலாம்.

ஆசைக்காக இயற்கை வளங்களை அழிக்கக்கூடாது என்று காந்தி கூறினார். இதை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்.

காந்தியின் அஹிம்சை கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சியோலில் இன்று நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதி பரிசு வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x