

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிடச் சென்ற அரசு எதிர்ப்பாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். 450 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி, பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், சூபி மதத் தலைவரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவருமான தாஹிர் உல் காத்ரி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை பிரதமர் இல்லத்துக்கு எதிரில் மாற்றுமாறு இம்ரான் கானும் காத்ரியும் தங்கள் தொண்டர் களுக்கு சனிக்கிழமை இரவு உத்தரவிட்டனர்.
இதையடுத்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களை, போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் கலைக்க முயன்றனர். இதனால் நூற்றுக்கணக்கா னோர் அருகில் உள்ள நாடாளு மன்ற வளாகத்துக்குள் நுழைந்த னர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
இந்நிலையில் இம்மோதலில் 450 பேர் காயமடைந்ததாகவும், இவர்கள் அனைவரும் நகரின் 3 மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில் காயமடைந்த வர்களில் 3 பேர் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதி வரை போராட்டம்: இம்ரான் கான் பேச்சு
இதனிடையே அரசுக்கு எதிரான போராட்டம் 18-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. தனது ஆதரவாளர்கள் மத்தியில் இம்ரான் கான் பேசும்போது, “நாட்டு மக்களும் அரசு ஊழியர்களும், போலீஸாரும் இந்த சட்டவிரோத அரசுக்கு எதிராக போராட வேண்டும். அரசு உத்தரவுகளை அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்கான இந்தப் போராட்டத்தில் நான் உயிரை விடவும் தயாராக உள்னேன். எனது இறுதி மூச்சு உள்ள வரை போராட்டம் தொடரும்” என்றார்.
பிரதமர் ஆலோசனை
இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் அமைச் சரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தின் மீதான தாக்கு தலுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. நாட்டின் அதிகார அமைப்புகளை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.